Search This Blog

Thursday, 20 February 2014

போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மலைப்பாம்பு

போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மலைப்பாம்பு

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் எலியை விழுங்கிய மலைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

மலைப்பாம்பு

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்து உள்ள பகுதியை சுற்றிலும் முட்செடிகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் அலுவலக வளாகத்தில் உள்ள செடிகளுக்கு இடையே ஒரு மலைப்பாம்பு குட்டி ஊர்ந்து சென்று கொண்டு இருந்தது. இந்த குட்டி மலைப்பாம்பு சுமார் 1½ அடி நீளம் மட்டுமே இருந்தது.

பரபரப்பு

இந்த குட்டி மலைப்பாம்பு ஒரு எலியை பிடித்து விழுங்கியது. இதனால் பாம்பின் வயிறு பெரிதாக காணப்பட்டது. அதனால் வேகமாக ஓட முடியாமல் கிடந்தது. இதனை பார்த்த போலீசார் அந்த பாம்பை அங்கிருந்து வெளியே அகற்றினர்.

No comments:

Post a Comment