பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கியவருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல்: ரூ. 7 லட்சம் இழப்பீடு
தூத்துக்குடி : பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பிணியாக்கியவருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி கோர்ட் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளையை சேர்ந்தவர் ஜெயமனுவேல் இவரது மகள் செல்வராணி, 18. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.பக்கத்து வீட்டில் இருந்த ஞானசிகாமணி மகன் ஸ்டீபன், 24. செல்வராணிக்கும், ஸ்டீபனுக்கும் காதல் மலர்ந்தது. திருணம் செய்து கொள்வதாக கூறி செல்வராணியை கர்ப்பிணியாக்கினார் ஸ்டீபன். திருமணம் செய்ய ஸ்டீபன் மறுத்ததால் செல்வராணி ஏரல் போலீசில் 07.08.2000 ல் புகார் செய்தார். ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. இந் நிலையில் செல்வராணி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. ஸ்டீபன் வீட்டில் வரதட்சணை கேட்டு திருமணம் செய்ய மறுத்துவிட்டனர். ஸ்டீபன் செல்வராணி கர்பத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, என மறுத்தார். தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் செல்வராணி 08.09.2000 ல் புகார் செய்தார். வழக்கில் ஸ்டீபன்,அவரது தந்தை ஞானசிகாமணி, தாய் எபனேசர்,சித்தப்பா செல்வராஜ், சித்தி ஜெபத்தங்கம், உறவினர் இஸ்ரவேல், இவரது மனைவி ராணி, செல்வக்குமார் ஆகிய எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது குற்றவியல் கோர்ட்டில் நடந்தது.05.10.2000 ல் செல்வராணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஸ்டீபன் தனக்கும் குழந்தைக்கும் சம்பந்தமில்லை என, தெரிவித்ததால் கோர்ட் மரபனு சோதனைக்கு உத்தரவிட்டது. மரபனு சோதனையில் ஸ்டீபன் தான் காரணம், என தெரியவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கதிரவன் உத்தரவில் ஸ்டீபனுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், செல்வராணிக்கு இழப்பீடாக ஏழு லட்சம் ரூபாய் வழங்கவும், மற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதன்முறையாக இழப்பீடு ஏழு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment