Search This Blog

Wednesday, 26 February 2014

காங்.,கில் வம்சவாளி அரசியல் கிடையாது : ராகுல் கருத்து கேலிக்கு உரியதாகும்

காங்.,கில் வம்சவாளி அரசியல் கிடையாது : ராகுல் கருத்து கேலிக்கு உரியதாகும்

தூத்துக்குடி : ""காங்., கட்சியில் வம்சவாளி அரசியல் இனி கிடையாது, என துணைத்தலைவர் ராகுல் கூறியிருப்பது கேலிக்கு உரியதாக உள்ளது,'' என பா.ஜ., கட்சியின் மாநிலத்தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்செந்தூருக்கு வருகை தந்த பொன்.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். பின் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.கட்சியுடன் அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக்கழகம், ம.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே., கொங்கு தேசிய மக்கள் கட்சி கூட்டணியில் உள்ளன. தே.மு.தி.க., வுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. யாருக்காகவம் பா.ஜ., கட்சி காத்திருக்காது. பா.ஜ., கட்சியினை மதவாத கட்சி என்கின்றனர். எந்த மதத்தின் பெயரும் கட்சியில் இல்லை. மதவாத கட்சி என கூறும் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இருந்து, பதவி சுகம் அனுபவித்தவர்கள் தானே. காங்., கட்சியில் வம்சவாளி அரசியல் இல்லை, என அதன் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். அவரது பின்னணி தெரியாமல் இப்படி பேசுவது கேலிக்கு உரியதாகும்.காங்., கட்சி ராஜிவ் கொலை வழக்கில் இரட்டை வேடம் போடுகிறது. தங்கள் தலைவர்கள் கொல்லப்பட்டதை காட்டி அனுதாபம் தேட நினைக்கிறது. காங்., கட்சியினை பா.ஜ., கட்சி வேரறுக்கும். பா.ஜ., கட்சி 300 இடங்களில் வெற்றி பெறும், என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மத்தியில் வலுவான பிரதமர் தலைமயில் ஆட்சி அமைய பா.ஜ., கட்சியினை ஆதரிக்க வேண்டும். இலங்கை போரில் 2.50 லட்சம் அப்பாவிகளை இனப்படுகொலை செய்த ராஜபக்சே அரசுக்கு முடிவு கட்டப்படும். பூரண மது விலக்கு கோரி சசிப்பெருமாள் 27 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனை கவனிக்க தமிழக அரசுக்கு நேரமில்லை. சசிப்பெருமாள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும், என்பது எனது கருத்து, என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment