Search This Blog

Thursday, 20 February 2014

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாருக்கு வாக்காளர்அட்டை வழங்க நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாருக்கு வாக்காளர்அட்டை வழங்க நடவடிக்கை

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை பெறாத போலீசாருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடையாள அட்டை

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பணி நிமித்தமாக சென்று விடுவதால், பலர் வாக்காளர் அடையாள அட்டை பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மா.துரை உத்தரவின் பேரில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை சப்–இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் மூலம், வாக்காளர் அடையாள அட்டை பெறாத போலீசாருக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

இதற்கான படிவங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போலீசார் பெற்றுச் சென்று உள்ளனர்.

அந்த படிவத்தை அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மூலம் அடையாள அட்டை பெறாதவர்களுக்கு கொடுக்கப்பட்டு, பூர்த்தி செய்து கொடுத்து விரைவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment