Search This Blog

Wednesday, 19 February 2014

விளாத்திகுளம் அருகே கோயில் விழாவில் மாட்டு வண்டி போட்டிகள்பதிவு செய்த

விளாத்திகுளம் அருகே கோயில் விழாவில் மாட்டு வண்டி போட்டிகள்பதிவு செய்த

விளாத்திகுளம், :விளாத்திகுளம் அருகே கோவில்குமரெட்டையாபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி உற்சவத்தை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி நடந்தது.
குமரெட்டையாபுரம்-நாகலாபுரம் சாலை யில் நடந்த இந்த போட் டியில் 13 பெரிய மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசு 13,136 ரூபாயை டி.துரைச்சாமிபுரத்தை சேர்ந்த பத்மநாபன் மாட்டு வண்டி பெற்றது. இரண்டாம் பரிசு 12,236 ரூபாயை சாமங்பட்டியை சேர்ந்த குமாரின் மாட்டு வண்டி பெற்றது. மூன்றாம் பரிசு 11,336 ரூபாயை கம்பத்துப்பட்டியை சேர்ந்த வீரசிங்கராஜாவின் மாட்டு வண்டி பெற்றது.
சின்ன மாட்டுவண்டி போட்டியில் 27 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இந்த போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட் டது. போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பிரிவுகளில் முதல் மூன்று இடத்தை பிடித்த வண்டிகள் பரிசுகளை பகிர்ந்து கொண்டன.
முதல் பரிசு 10,076 ரூபாயை முத்தூரை சேர்ந்த மாடசாமியின் மாட்டு வண்டி மற்றும் இருவேலி யை சேர்ந்த சுலைமானின் மாட்டு வண்டிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இரண்டாம் பரிசு 9,032 ரூபாயை சாயல்குடியை சேர்ந்த அசன்அலியின் மாட்டு வண்டி, கம்பத்துப்பட்டியை சேர்ந்த சின்ன ராஜாவின் மாட்டு வண்டிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. மூன்றாம் பரிசு 8015 ரூபாயை சிங்கிலிபட்டியை சேர்ந்த பெருமாள்சாமியின் மாட்டு வண்டி மற்றும் கிட்டங்குளத்தை சேர்ந்த மாணிக்கத்தின் மாட்டு வண்டிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. விழாவில் ஒன்றிய கவுன்சிலர் அழகர்சாமி, தொழிலதிபர் வசந்தம் ஜெயகுமார் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கனக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment