துணைத்தாசில்தார்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் தேவையில்லை
தூத்துக்குடி : தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் பணி செய்யும் அதிகாரிகள் அவர்களது பணியிடங்களில் இருந்து மாறுதல் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதில் துணை த்தாசில்தார்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய தேவையில்லை, என தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். பணியிட மாற்றம்:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளில் தாசில்தார் நிலையில் உள்ளவர்கள் வரை பணியடட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டம்: துணை தாசில்தார், ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது, என தங்களது சங்கங்கள் மூலமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து புது டில்லில தலைமை தேர்தல் கமிஷனிடம், அதிகாரிகள் தெரிவித்தனர். துணைத்தாசில்தார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ளவர்களை பணியிட மாற்றம் செய்ய தேவையில்லை. தேர்தல் அதிகாரிகளான கலெக்டர் இவர்களை நேரடியாக கண்காணிக்க வேண்டும். தவறுகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளது. மாற்றம் செய்தவர்கள் தவிப்பு: தற்போது தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் துணைத்தாசில்தார்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அவர்களும் புதிய இடத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். இந் நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பணியிட மாற்றம் செய்த அதிகாரிகள், என்ன செய்வது, என்ற குழப்பத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment