கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் மானாவாரி பயிர் விளைச்சல் வீழ்ச்சி விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
கோவில்பட்டி, : தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதியில் மானாவாரி பயிர்களின் விளைச்சல் பெரிதும் வீழ்ச்சியடைந்துவிட்டது. அவற்றின் விலையையாவது அரசு உயர்த்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு மண்டலமான கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் தாலுகாக்களில் சுமார் 4.5 லட்சம் ஏக் கர் வானம் பார்த்த மானா வரி நிலம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் மழை அளவு குறைந்தே வருவதால் மானாவாரி விவ சாயம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இங்கு மழையின் தன் மையை உணர்ந்து, வறட் சி யை தாங்க கூடியதும், குறைந்த நாட்களில் விளைச் சல் தரக்கூடிய உளுந்து, பாசிப்பயறு, கம்பு, மக்காச்சோளம், மல்லி, குண்டு மிள காய் போன்ற மானாவாரி பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இந் தாண்டு நிலத்தை உழுது, பண்படுத்தி, மேலுரமிட்டு, களை எடுக்க ஏக்கருக்கு ரூ.15ஆயிரம் வரை செலவு செய்தனர்.
வழக்கமாக கம்பு, சோளம், மக்காச்சோளம் போன்றவற்றில் ஏக்கருக்கு சராசரியாக 20 முதல் 25 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் பருவ மழை பொய்த்ததால் பயிர் சரிவர வளராமல் சோடை யாக காணப்படுகிறது. அறுவடை கூலிக்கு கூட அகப்படாது என தெரிந்தும், வேறு வழியின்றி விவசாயி கள் கூலியாட்களை வைத்து அறுவடை செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 25 குவிண் டால் கிடைக்க வேண்டிய விளைச்சல் சராசரியாக 1 குவிண்டால் மட்டுமே கிடைத்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.
கடந்த ஆண்டு குவிண்டாலுக்கு உளுந்து ரூ.6 ஆயி ரத்து 500ம், சோளம் ரூ.ஆயிரத்து 400ம், மக்காச்சோளம் ரூ.ஆயிரத்து 500ம், சிவப்பு சோளம் ரூ.4 ஆயிர மும் விலை போனது. இந்த ஆண்டு விளைச்சல் அடி யோடு குறைந்ததால் விலை அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர்கள் நம்பிக்கை பொய்த்துப்போனது. தற்போது ஒரு குவிண்டால் சோளம் ரூ.ஆயிரம், கம்பு ரூ.ஆயிரத்து 200, சிவப்பு சோளம் ரூ.2 ஆயிரம், மக்காச்சோளம் ரூ.ஆயிரத்து 100 என குறைவாகவே வியாபாரி களால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலை தொடர்ந்தால் மானாவாரி விவசாயம் அடியோடு பாதிக்கப்படும். அடிமாட்டு விலைக்கு விளை பொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அவற்றை இருப்பு வைத்து சில மாதங்கள் கழித்து சந்தையில் அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள் என விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே, விளைச்சல் குறைவால் வெம்பியிருக்கும் விவசாயிகள் கடனில் மூழ்காமலிருக்க குவிண்டால் உளுந்துக்கு ரூ.10,000, சிவப்பு சோளத்துக்கு ரூ.4,000, கம்பு, சோளம், மக்கா சோளத்துக்கு ரூ.2,500 என அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment