Search This Blog

Wednesday, 19 February 2014

தூத்துக்குடி மாவட்டம் பொது செய்தி மனைவியுடன் தகராறு: போதையில் வீட்டை கொளுத்திய விவசாயி

தூத்துக்குடி மாவட்டம் பொது செய்தி
மனைவியுடன் தகராறு: போதையில் வீட்டை கொளுத்திய விவசாயி

தூத்துக்குடி : சாத்தான்குளம் அருகே மனைவியுடன் தகராறு செய்த கணவர் மது போதையில் வீட்டை கொளுத்தினார். சாத்தான்குளம் அருகே அரசூர் புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன், 45. இவரது மனைவி ஜெயலட்சுமி, 42, இவர்களுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியன் மது போதையில் வீட்டில் தினசரி தகராறு செய்து வருவார். நேற்று முன் தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த சுப்பிரமணியனுக்கும், மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டையும், அருகில் போடப்பட்டிருந்த செட்டையும் தீவைத்து கொளுத்திவிட்டு தப்பி ஓடினார். ஜெயலட்சுமி புகாரின் பேரில் தட்டார் மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். தற்போது ஜெயலட்சுமி நான்கு குழந்தைகளுடன் வாழ வீடு இன்றி தவித்து வருகிறார்.

No comments:

Post a Comment