சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் இன்று (செப்டம்பர் 5) காலை நடந்த அரசு நிகழ்ச்சியில் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகள் மத்தியில் பேசும் போது, ஆட்டுக்குட்டி கதை ஒன்றை கூறி அசத்தினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மந்தைகளில் இருந்து ஆட்டை ஓட்டி வரும் நபர், ஒரேவொரு ஆட்டை மட்டும் தனது தோளில் போட்டுக் கொண்டு வருவார். அந்த ஆடு நடக்க முடியாததாக இருக்கும். இல்லையெனில் காலிலே காயம்பட்டதாக இருக்கும்.
அதுதான் சமூக நீதி என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள். இவ்வாறு தோளில் போட்டுக் கொண்டு வருவது ஆட்டிற்கு காட்டும் சலுகை அல்ல. அது மேய்ப்பவரின் கடமை. இத்தகைய கடமை இருப்பதால் தான் இந்த அரசு பல நல்ல திட்டங்களை தீட்டி வருகிறது என்று கூறினார். ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவிகள் உயர்கல்வி கற்பதற்கு புதுமைப் பெண் திட்டமானது பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
No comments:
Post a Comment